நண்பனின் வேண்டுகோள்

என்னுயிர் தோழியே நீ
எப்பொழுதும் என்னுடன்
இருக்க வேண்டும்

உன் அன்பு இல்லை
எனில் என் உலகம்
இறந்து விடும்

பிறந்து விவரம் தெரியும் வரை
மட்டும் தான் தாய் ,தந்தை பாசம்
முழுமையாக தெரியும்

அந்த பாசம் காலம் முழுதும்
கிடைப்பதர்க்ககத்தான்
உன்னை அனுப்பி உள்ளான்
ஈசன்

என்னைப்போல் ஒவ்வொருவனுக்கும்
உன்னைப்போல் ஒரு தோழி
கிடைத்தால் அனைவரும்
உலகத்தை வென்று விடுவார்கள்

அழகான வாழ்க்கை உன்னால்
உருவானது - அழியாத நினைவுகள்
நம் நட்பால் உருவானது

நீ சில நாள் பேசாத இருந்த
அந்த நாள் எப்பொழுதும்
எமனின் காலடியில்
வாழ்ந்ததுபோல் ஓர் உணர்வு

இனி என்னோடு பேசுவதை மட்டும்
நிறுத்தி விடாதே தோழி - என் இதயம்
துடிப்பதை நிறுத்தி விட்டு சாக தயாராகிவிடும்

தோழியே காதலில் மட்டும் தான்
இறப்பு என்பதில்லை
நீ என்னிடம் பேசுவதை நிருத்திபார்
நட்பிலும் இறப்பு நிகழும்

பிறகு வருவாய் எனது இறுதி
ஊர்வலத்தில்
வாக்கரிசி போடுவதற்காக

உன்னைப்போல் தோழி கிடைக்காமல்
தவிக்கும் ஒவ்வொரு ஜீவனும்
அனாதைதான் (என் உயிர் தோழி சங்கீதா)

எழுதியவர் : வே.அழகு (19-Mar-13, 8:06 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : nanbanin ventukol
பார்வை : 108

மேலே