ஈழத்தில் எம்மக்கள்

முழு அடைப்பில் மூடி கிடக்கும் கடைவீதியாய்!
ஏனடி? உன்முகம் வெறுச்சோடி கிடைக்கிறது!!
ஈழத்தில் எம்மக்கள் இறந்த செய்தி கேட்ட!!!

தொப்புள்கொடி உறவொன்று ஓரத்தில்
இருந்து கொண்டு ஒப்பாரி வைக்கின்றாய்!
குண்டு போட்ட போதெல்லாம் -நீ
குறட்டை விட்டு தூங்கிவிட்டு!!
இன்று புலம்பி -நீ
என்ன செய்ய போகிறாய்!!!

சிங்களவன் சிநேகிதத்தால் சிந்தையழந்து கிடைக்கிறாள் -என் இந்திய தாய்!
தமிழனின் உணர்வுகளுக்கா தலை சாய்க்க போகிறாள்!!
நம் தாய் என்ற தகுதியை தானே இழந்துவிட்டு
தலை குனிய போகிறாள் இந்திய தாய்!!!

விடுதலை புலிகளின் விடுதலை போராட்டம்
வீணாய் போனதென்று வீண் பேச்சு பேசிக்கொண்டு!
இந்திய ஒருமை பாட்டில் இடைவெளிய
ஏற்படுத்திகிறாள் இந்திய தாய்!!
இலங்கை நமது நட்பு நாடென்று கூறிக்கொண்டு
மாபெரும் வரலாற்று தப்பு செய்து கொண்டுயிருக்கிறாள் !!!
இந்திய தாய்!!! இந்திய தாய்!!! இந்திய தாய்!!!

எழுதியவர் : MAYAVEL (20-Mar-13, 6:30 am)
பார்வை : 109

மேலே