ஆறறிவோ ஐந்தறிவோ யாரறிவர்?
தன் வழியில் போகுமென்னை
வம்புக்கு இழுப்பார்கள்!
எதிர்த்து நானும் நின்றுவிட்டால்
ஊரையே அழைப்பார்கள்!
காதலியுடன் நானாட
படம் பிடித்து ரசிப்பார்கள்!
நானில்லா இடம் சென்று
உணவிட்டு வருவார்கள்!
அமைதியாக நானிருந்தால்
சிறைக்குள்ளே அடைப்பார்கள்!
ஆசையாக முத்தமிட்டால்
உயிரையே எடுப்பார்கள்!
ஆறறிவின் மனம் புரியவில்லை!
ஆதரிப்பாரா தெரியவில்லை!
கோவிலுக்குள் எனை பார்த்துவிட்டால்
தலை வணங்கி மகிழ்வார்கள்!
நான் யாரென்று உமக்கு தெரிந்திருக்கும்
என்வழியில் இப்பவுமே ஊர்கின்றேனே!