பெண் பார்க்கும் படலம்
அவள்..!!
நெற்றி பொட்டின் நிறம்
காது மடல்களில் துள்ளிவிளையாடும்
தோடும் திருகானியும்
கண்களை பறிக்கும் நெயில் பாலிஷின்
ஜொலிப்பு
சங்கு கழுத்தில் கிழே குதிக்கலாமா என
சைகைகாட்டும் கழுதனியின் தொங்கல்
இதழ்யோரம் சிந்தும் உதட்டு சாயத்தின்
பிரதிபலிப்பு...
இவையெல்லாம் சொல்லாமல் சொல்லுகின்றன
அவளின் அழகு குணமே என்று
ஏனோ வந்த ஆண்மகன் இவையெல்லாம்
ரசித்து விட்டு சொல்லுகிறான்
அம்மா என்ன சொல்லுகிறார்களோ
அதே என்று...
ம்ம்ம்ம் அவன் ரசித்த அணிகலன் குறைவாம்
அதானால் பதில் போடுகிறேன்
என்று சொல்லிவிட்டு செல்லும்
முன்னாள் மருமகள்...???