இனம். மதம்.ஜாதி தேவையா ? 36
இனம்,ஜாதி, மதம்
இன்றைக்கு தேவையா ?
ஒரு மிகப்பெரிய
பிரச்சனைக்கு ஓரிரு வரிகளில் விடை தர இயலாது.
மனிதன் விலங்காக மாறாமல்
இருக்கவும்,
மனிதன் மனிதனாக வாழவும்,
மனிதன் தெய்வ நிலைக்கு
உயரவும்,
நம் முன்னோர்கள்
உத்தமமான வழி
முறைகளையும்,
உண்மையான நெறிமுறைகளையும்
உருவாக்கி வைத்தார்கள்.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை- அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
உலகம் உயர்வானது என்பதை
கடைபிடிக்கவும், அதே
உலகம் காறிஉமிழ்வதை
விலக்கி வாழவும்
மெய்யான மெய்யறிவோம்.
இனம் என்பது
ஆரியம், திராவிடம்
ஜாதி என்பது
பிறப்பில் இல்லை.
மதம் என்பது
பகைவனையும்
நேசிக்க சொல்வது.
இவற்றில்
உண்மையைப் போலுள்ள
பொய்களையும்,
பொய்யென தள்ளப்பட்ட
உண்மைகளையும்
ஐயம் திரிபற நாம் அறிந்துக் கொண்டால் எல்லா
மயக்கங்களும்
மறைந்தொழியும்.
அந்நாள்
எந்நாள் என்பதே
என் ஆவல்.
ஜோசப் கிரகரி ரூபன்.
20.03.13