நிம்மதியாய் இருப்போம்
இருளை போக்க மின்சாரம்
இணைப்பு எடுத்தபோது புரியவில்லை
கட்டணம் உயர்த்தப் படும்போது
வாழ்க்கை இருளுக்குள் தள்ளப்படுமென்று.
சம்சாரம் அது மின்சாரம்
என்று திருமணம்
முடித்த போதும்
ஒரு அலகு மின்சாரத்துக்கூட
பிரயோஜனப் படாத
அவளால் பிரயோஜனப்
படுத்தப்பட்ட
மின் உபகரணங்களால்
கட்டுப் படுத்த முடியாமல்
போனது மின் பாவனை
மட்டுமல்ல
எகிறி நிற்கும்
வாழ்க்கைச்செலவும்தான்
மீண்டும் காட்டு வாசிகளாய்
குகைகளைத்தேடி
இருட்டுக்குள்
வசிக்கப் பழகிக்
கொள்வது நல்லது போலும்
இல்லாவிட்டால்
எகிறிச் செல்லும்
மின் அலகுகள்
எங்கள மேனி அழகை
சிதைத்து மிருகங்களிடதிலும்
எங்கள அடையாளங்களை
அன்னியப் படுத்திவிடலாம்
வளரும் அணு யுகத்தில்
அணுவணுவாய்
சாவதற்குப் பதிலாய்
நாகரீகமற்ற பழைய வாழ்வில்
நிம்மதியாகவேனும்
இருந்துவிட்டுப் போவோம்.