உறவும் ஏமாற்றமும்
அழகான காதல்
ஆழமான உறவு
இந்த இன்பத்திற்கு
ஈடு இணை இல்லையே
உள்ளமெங்கும்
ஊறுகின்றது
என்னாசை
ஏக்கத்தில்
ஐந்தமிர்தமாய்
ஒன்றானோம்
ஓரளவும் பிரியவில்லை
அழகான காதல்
ஆழமான ஏமாற்றம்
இதயத்தை கிழித்து
ஈறுடன் பிடுங்கி
உடைத்து
ஊருக்கு வெளியே
எல்லையில் எரிந்தான்
ஏகமாய் அழிந்திருக்கும்
ஐயமின்றி
ஒன்றாயிருந்த நாட்கள்
ஓரளவும் அழியவில்லை