துணிவாய் சொல்லு ஜெனிவா
ஜெனிவா கூட்டம் என்ன சொல்லும்
கனிவா சொல்லுமா
கலங்கி நிக்குது தமிழ் இனம்
கண்துடைக்க வருமா
நல்ல மனம்
நாதியத்து போகவில்லை
தமிழ் கூட்டம்
நாங்கள் துடைப்போம்
உம் வாட்டம்
இதுதான் எங்கள் நாட்டம்
போர் குற்றம் செய்தோரை
விடமாட்டோம்
அவர் போதனையை
கேட்போரை
உலகில் நடமாட விடமாட்டோம்
என்ற நல்ல வார்த்தை வேண்டும்
ஜெனிவா கூட்டமே
துணிவாய் சொல்லு