பெண் பார்க்கும் படலம்!
தோழிகளின்
எள்ளல் பேச்சு!
வெட்க நடை
வெட்க பார்வையோடு
வந்தவர்கள் முன்
வணங்கி உபசரித்து
பெண் பிடித்திருந்து -
மற்ற லெளகீகங்களில்
மனம் கோணி
தடையுறும் போதும்
தட்டு தடுமாறி
ஏதோ ஒரு நம்பிக்கையில்
மீண்டும் ஒர்
மாலைப் பொழுதில்
மறு அரங்கேற்றம்
ஆகும் இன்னுமோர்
"பெண் பார்க்கும் படலம்"
நாடகம்!