தட்சணை!
நீ என்னை
மணம்
செய்யும் முன்
தட்சணையாக
பணம் நகை
கேட்டாய்!
தந்தேன்!
உன் மனைவியான
பின் என் காதலையும்
உன் காமத்தையும்
தட்சணையாக
கேட்டாய்!
கொடுத்தேன்!
நீ இறந்த பின்
தட்சணையாக
என் பூவையும்
பொட்டையும்
கேட்கிறாயே?
தட்சணைகள்
போதாதா
கணவனே?