தொலைபேசிக்கு ஏதும்...?

உன்னோடு செல்ல சண்டையிட்டுவிட்டு
நீ பேசாதவரை யார் பேசினாலும்
கோபம் தான் வருகிறது ...

இதற்கு அம்மாவும் விதிவிலக்கல்ல
தொலைபேசியிலிருந்து
என்னடா கோபமா என்று
என்று எப்போது கேட்பாய் என்று
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..?

தயவு செய்து தொலைபேசியை ..
நிறுத்தி வைக்காதே ...!
தொலைபேசிக்கு ஏதும் நடந்துவிடபோகிறது ...?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Mar-13, 6:04 am)
பார்வை : 237

மேலே