இப்படியும் இன்றொரு காதல்
மண்டியிட்டு மரணம் கேட்க
மறுமுறை பிறக்க கேட்க
மருதாணி செடியின் மடியில்
அவள் கைப்பட்டு பறிக்கவே
அவளோடு பத்து நாள் வாழவே
மேகத்தோடு சண்டையிட்டு
தூறலாக மாற்ற கேட்க
தூறும் பொழுது தூரலாய்
அவள் மேல் விழக்கேட்க
தங்க முலாம் பூசி
தங்கத்தோடாக மாற்ற கேட்க
தங்கத்தாரகையோடு வாழ கேட்க
நெய்பவனோடு நெருங்கி
நெஞ்சு வெடிக்க கேட்க
நெய்துவிடு என்னைவென
அவள் உடையாக மாற்றுமென
ரோஜாச்செடியிடம் கேட்க
ரோஜாவாக மாற்றச்சொல்ல
அதுவும் அன்றே மாற்ற கேட்க
அந்நாளே அவளோடு வாழ கேட்க
இவை அனைத்தும் கேட்கவிருந்தேன்
இவர்களிடம் கேட்கமால் மறந்தேன்
அவளிடமே கேட்டேன்
என்னை ஏற்று கொள்ளுமென
கேட்கும் இடமெல்லாம் சத்தமாம்
பார்க்கும் இடமெல்லாம் இரத்தமாம்
பேசும் இடமெல்லாம் குழப்பமாம்
வா அன்பே வா என்றாள்
விஞ்ஞானாக மாறச்சொன்னாள்
விண்ணுலகத்தை காட்டச்சொன்னாள்
விண்ணில் வீடு கட்ட சொன்னாள்
வின்மின்களை அழைக்க சொன்னாள்
இவை அனைத்தும் செய்தால்
ஏற்று கொள்கிறேன் என்றாள்
வேண்டாமென சொல்லாமல்
வேடிக்கை காட்டினால்
வேண்டியே விழுந்துவிட்டேன்
வேலியில்லா பெண் புலியோடு