......தாலாட்டும் நினைவுகள்....

ஒரூவரின் வரவு நம் வாழ்க்கைக்கு
அர்த்தம் கொணர்வதில்லை... ஆனால்
அந்த ஒருவர் உள்ளத்தில் நிறையும்போதுதான்
வாழ்க்கையே அழகாகின்றது...
மறந்து விடணும் என முடிவெடுக்கும் சமயங்களில்தான்,
முண்டியடித்துக் கொண்டு வெளி வருகின்றது,
உன் கொஞ்சல்களின் வழி நீ செய்த சில்மிஷங்கள்...
பார்க்ககூடாதுதான் என் பத்திரமாய்
பாதுகாத்து வைத்த உன் நினைவுப் பொக்கிஷங்கள்,
சுழலில் சிக்கிய காகிதங்கள் போல்
என்னைச் சுற்றி சுற்றி வருகின்றன...
தேவையே இல்லை நீ என்று..
மனதை தேற்றும் சமயங்களில்,
தென்றல் போல் என்னைத் தாலாட்டுகிறது,
உன் காதலின் புரிதலும்,, பரவசமும்.....
என்றாவது ஒரு நாள் நீ வந்துவிடு..
கனவிலாவது.....
அல்லது
காந்தருவனாகவாவது......

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (23-Mar-13, 12:35 pm)
பார்வை : 160

மேலே