எங்கே என் காதல்
அவள் இல்லாமல் ஒரு நொடி வாழ்வாதா
முடியாது என்றது காதல் ...
அவளின் நினைவுகூட இல்லாமல்
வாழ்கிறேன் முடியும் என்றது வாழ்க்கை..
வெட்கம் மறந்து காதலை சொன்னேன் பலர்
முன்னிலையில் அன்று
அதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன்
தனிமையில் இன்று
அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய மனது
இன்று கண்டுவிடுவாளோ என்று மருண்டு மறைகின்றது
எங்கே என் காதல் காதலில் தோற்று விட்ட விரக்தியா
வாழ்கையில் ஜெயித்து விட்ட இறுமாப்பா
இதுதான் வாழ்க்கைய ?
இருந்தும் எதோ ஓர் மூலையில் என்றாவது ஓர் நாள்
என்னை நினைத்து பார்திருப்பளா...
இதுதான் காதலா...!