சவக்குரல்

* இன்பமாய் இருக்கிறது
இந்த தருணம்.....!
* குப்பைத்தொட்டியில்
குடி புகுந்த நாள் முதல்
"பிச்சை" என்பதைத்தவிர
உச்சரிக்காத என் உதடுகள்
ஓய்ந்து கிடப்பதால்....!
* கனவுகளை மட்டுமே
சுமந்து திரிந்த
என் கரு விழிகள்
காலத்திற்கு விடை கொடுத்ததால்...!
* இன்பமாய் இருக்கிறது
இந்த தருணம்.....!
* உணவளித்தவர்களை
உறவுக்காரர்களாய் நினைத்த
என் உள்ளம் உறங்க போவதால்....!
* எட்டு வயதில்
கல்லறைச் சேரும்
கவலை இல்லாததால்...!
* இன்பமாய் இருக்கிறது
இந்த தருணம்.....!
* எனக்கும் ஒரு சமாதி கொடுக்க
அரசாங்கம் இருப்பதால்...!
* வாகனச் சக்கரத்தின் அடியில்
நான் வாய் பிளந்து கிடக்கையில்
கண்ணீர் சிந்த சில கண்கள் கிடைத்ததால்....!
* இன்பமாய் இருக்கிறது
இந்த தருணம்.....!

எழுதியவர் : ரமணி (23-Nov-10, 6:18 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 404

மேலே