மலையாள கவிதை

மலையாள கவிதை - எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.

நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு

இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை

எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?

எழுதியவர் : பி. பி. இராமசந்திரன் (24-Nov-10, 10:07 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 814

மேலே