இயேசு ராஜா

உலகில் ஒரே ராஜா

தனக்கென வாழாத நல்ல ராஜா

தரணியை வாழ்விக்க வந்த தன்னிகரில்லா ராஜா

பாவியை தேடி சென்ற அருமை ராஜா

உத்தமரை மகிழ வைத்த அன்பு ராஜா

அன்பாய் வாழ்ந்து அன்பை விதைத்த பாச ராஜா

பகைவரை நேசிக்க சொன்ன உத்தம ராஜா

சிறு குழந்தையாய் மாற சொன்ன எங்கள் ராஜா

தன் தாயை உலகிற்கு அளித்த உன்னத ராஜா

உலகோர் பாவங்களை தானே சுமந்த ராஜா

தேடும் யாவர்க்கும் நலமளிக்கும் அருமை ராஜா

நியாய தீர்பளிக்க வரும் வான்லோக ராஜா

அயலாருக்காக ஜெபிக்க சொன்ன நித்திய ராஜா

என்றும் நன்றியுரைக்க சொன்ன சத்திய ராஜா

எழுதியவர் : கசிகரோ (23-Mar-13, 9:14 pm)
சேர்த்தது : Casimier Caroline
பார்வை : 176

மேலே