இயற்கையின் படைப்பை ....

வானை முத்தமிடும் கடல்
கடலை தொட்டிடும் வானம் !
நீளம் அகலமறியா வானும்
ஆழமறியா கடலும் ஆனந்தமே !

இயற்கையின் இணையிலா காட்சி
விழிகளுக்கு இலவச விருந்து !
இறுக்கமிகு நேரத்தில் எவருக்கும்
இதயத்திற்கு இன்பமிகு மருந்து !

ரசிப்பவர் யாருமே நிச்சயம்
சுவைப்பவர் அழகின் ருசியை !
ரசனை இல்லாத நெஞ்சங்களும்
அகமும் மகிழும் அறியாமலே !

இயற்கையின் படைப்பை நாமும்
இயன்றவரை தவறாது காண்போம் !
இவ்வுலகில் உள்ளவரை துணையாய்
இதயத்தில் இருந்திடும் நினைவாய் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Mar-13, 9:46 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 88

மேலே