அம்மாவுக்காக ஒரு கண்ணீர்
பணம் தரும் கலைகள்
பலவும் கற்று
பளிங்கு வீட்டுள்
படுத்திருந்தோம்
தங்கம் வெள்ளி
வைரம் வாங்கி
தனித் தனி அறையில்
பதுக்கி வைத்தோம்
வீட்டின் ஓரம்
நாய்குக் கூட
ஒதுங்க ஓர்
இடம் கொடுத்தும்
பனை மரக் கூரையில்
பைத்தியக் காரியை
படு வேதனையில்
தனித்து விட்டோம்