காதல் கீதம்

அழகே...!

நிலமாய்உன் நினைவுதான்
என்மெய்யினைத் தாங்குதடி...!

நீராய்உன் அழகுதான்
என்மனதினுள் தேங்குதடி...!

காற்றாய்உன் காதல்தான்
நொடியிலும் என்னைப்பிரியாச் சுற்றுதடி...!

வானாய்உன் வடிவம்தான்
தினம் பகல்தோன்றி மறையுதடி..!

நெருப்பாய்உன் எண்ணம்தான்
என்உறுப்புகளைச் சிதைக்குதடி...!

நொடிப்பொழுதும்
உன் கற்பனைதான்
நெஞ்சுக்குள்ளே துடிக்குதடி...!
பஞ்சபூதங்களாய் இல்லை...!
நெஞ்சத்தின் கீதங்களாய்...!

எழுதியவர் : mu .Jeevaraj (24-Mar-13, 1:54 pm)
சேர்த்தது : மு.ஜீவராஜ்
பார்வை : 77

மேலே