அதிகாரம்

மாமரத்தின் கிளைக்கு
குருவிச்சை சொன்னது ...
"நீ இனி வளர்வதானால்
என் வேரைக் கேட்டே
வளரவேண்டும் "
"உன் வேர் எங்கே?"
பவ்வியமாய்
மாமரம் கேட்க
"அதோ உன் முதுகில் தான்"
என்றதாம் குருவிச்சை.

எழுதியவர் : yazhavan (24-Mar-13, 9:47 pm)
சேர்த்தது : yazhavan
பார்வை : 109

மேலே