பனித்துளியின் காதல்
காலை கதிரவனை
காதலிக்கும் பனித்துளியாய் நான்
உன்னை காண கனவோடு
காத்திருந்து கரைந்து
காணமல் போகிறேன்
உன் கால்தடம் பதியும் நேரம்....
புல்களின்மேல் ஒய்யாரமாய் அமர்ந்தும்
மலர்களின் இதழோரம் இதமாய் அமர்ந்தும்
உனக்காய் காத்திருந்த பொழுதுகள்
என்னை கேலி செய்கிறது
மறுநாள் உன்னை காண வரும் பொது
அவைகளுக்கு தெரியாது தினம்
கற்றை மாறி உன்னோடு கலப்பது....
ஒவ்வொரு நாளும்
உன்னை வரவேற்று
உருவமற்று போகிறேன் நான்
உன் வருகையால்....
தினம் இறந்து போவது
எனக்கு சந்தோசம்தான் என்
உயிர் தினம் உன்னால் பிரிவதால்....
காதலுக்கு கண் இல்லை
என் காதலுக்கு உருவம் இல்லை
காலை பொழுதுகள் தோறும்
உன் மஞ்சள் முக பார்வையால்
கொஞ்சி முத்தமிடு என்னை
வாழ்நாள்தோறும் காத்துகிடப்பேன்
நீ வரும் திசை பார்த்து....