நீ பேசாத நொடிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ பேசாத நொடிகள்.................................
அசைவாடும் உன் நினைவுகளுடன்
ஆழமான என் அன்பு
இசைந்தாடி இரவும் பகலும்
ஈரமாக்குகின்றது என் தலையனையை.......
உன் கரங்களில் சேரவே
என்னை உன் நினைவுகளில் உருக்கி
ஏங்கி ஏங்கி தவிக்கும் நேரத்தில்,,,,,
ஐயோ, என்னை மறந்துவிடு என்ற
ஒற்றை சொல்லில் என் இதயத்தை
ஓரமாக குத்தி கிழித்து செல்கின்றாயே.............
ஔசதமாக உன் நினைவுகள் மட்டும்
நீ பேசாத நொடிகளில்...........