அன்பை......

கிண்ணம் நிறைய பால் சோறு
இருந்த போதிலும்,
மனம் ஏங்குது...
ஒரு முறை உன் கை பட்ட
பழைய சாதம் சாப்பிட...

எத்தனையோ பட்டு மெத்தைகள்
என்னை தாலாட்டி
தூங்க வைக்க இருந்த போதிலும்
என் மனம் உன்
வியர்வை நிறைந்த ஆடையைத்தான்
தேடி திண்டாடுது....

குளிர் சாதனா வசதியில்
மிதந்த போதிலும்
உன் மடியில்
எலும்புகள் குத்த படுத்து
உன் மெலிந்த கரங்கள் வீசும்
ஓலை விசிறி
காற்றிற்காக மனம் ஏங்குது.....

எங்கு போய் தேடுவது.....
ஏற்கனவே இழந்த பாட்டியின் அன்பை......

எழுதியவர் : சாந்தி (25-Mar-13, 11:09 pm)
Tanglish : anbai
பார்வை : 87

மேலே