அன்பான உபசரிப்பில்

சின்னத் திரையில்
அழுகைக்கு ரசனை கூட்டும்
நாடகம் இல்லை..
அதனால் மனைவியின்
அன்பான உபசரிப்பில்
கூடுதலாக சாப்பிட்ட நான்...

டோரா புஜ்ஜி, கார்ட்டூன்
சத்தம் இல்லை தொலைக்காட்சியில்
அதனால்
செல்லக்குழந்தை
தொங்குவது என் தோள்களில்

நிதர்சனமான உண்மை...
தமிழக மின்தடை என்பதே.....

எழுதியவர் : சாந்தி (25-Mar-13, 11:28 pm)
பார்வை : 117

மேலே