உணர்வு ஊட்டும் காதல்கடிதம்...!

இப்ப எங்க.... சார்... கடிதம் ..? SMS ஈமெயில் என்று வந்த காலத்தில் கடித்தத்தை பற்றி பேசுகிறீர்களே ..
என்று நினைக்கிறீர்கள் ...என்னதான் என்றாலும் கடிதத்தில் உள்ள உயிர் வேறு எதிலுமே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ...

ஒரு கவிஞனின் ....அற்புத கவிதை வரிகள் ..

--- நான் எழுதிய காதல் கடிதத்தை வாங்க மறுத்த காதலி நல்ல கவிதையை இழந்துவிட்டாள்---

உங்களது பிரியமானவர்களுக்கு காதல் கடிதம் எழுதச் சொன்னால் எப்ப‍டி எழுதுவீர்கள்?

அன்பான, ஆரோக்கியமா ன, உணர்வு பூர்வமான, காதலை சொல் லும் வார்த்தைகளாக பார்த்து, கடிதம் எழுதி பரிசளியுங்கள். அப்புறம் பாருங் கள் உங்களுடையவர் அடையும் மகிழ்ச்சியை.

உயிர் வரை ஊடுருவும்
************************************
நேசத்திற்குரியவரை கண்கள் கண்டதும் மூளையின் நரம்புகளில் ரசாயன மாற் றம். இதயத்தில் தெறிக்கும் மின்னல் காதலின் வருகையை உணர்த்திவிடும்.

முதல் நாள் பார்த்த இடத் தில் மறுநாளும் சந்திக்க மனம் ஏங்கும், கால்கள் தானகவே அந்த இடத்தை நோக்கி நகரும். இது காதல் ஏற்படுத்தும் மாற்றங்கள். எனவே நம்முடைய காதலை எங்கு எவ்விதம் தெரிவிப்பது என்று மனம் ஏங்கித் தவிக்கும்.

தூக்கத்தை தொலைத்த ராத்திரிகள், உணவை தவிர்த்த பொழுதுகள் என காலம் கடத்துவதை விட மனதை தொடும் வகையில் கடிதம் எழுதி அதை கவித்துவமாக பரிசளிக்கலாம். காதல் உணர்வுகளுடன் கவித்துவ மாய் வடித்த அந்த கடிதம் நிச்சயம் உங்களவரின் உயிர் வரை ஊடுருவும்.

ஸ்பெஷல் வார்த்தைகள்
*************************************
காதல் கடிதம் எழுதுவது சாதரண விசய மல்ல. நலம் நலமறிய ஆவல்… என்ற சாதாரண வார்தைகளை இட்டு நிரப்பி தருவதை விட காதலை உணர்த்தும் வகையில் ஸ்பெச லான வார்த்தைகளைக் கொண்டு எழுதலாம்.

கடிதத்தில் முதலில் சந்தித்த இடம், ஈர்த்த விசயங்கள், போன்ற காதல் நினைவுக ளை டச்சிங்காக எழுதலாம். அதே சமயம் அதீத அலங் கார வார்த்தைகள் போட்டு படிப்பவர்களை குழப்ப வே ண்டாம். எனவே சிறப்பான வார்த்தைகளை தேர்ந் தெடுத்து கடிதத்தை எழுதுங் கள் அது காதலுக்கு ஒகே சொல்ல வைக்கும்.


கடிதத்தில் தொடக்கம் எவ்விதம் காதல் வார்த்தைகள் நிரம்பிய தாய் இருக்கவேண்டுமோ அதோ போல் முடிவும் காதல் உணர்வு கள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.

உயிர் வரை தொடும்
*******************************

கடிதத்தின் உரையின் மீது சிவப்பு ரோஜாவை ஒட்டி, சிவப்பு நிற ரிப்பனால் இதய வடிவத்தில் கட்டி பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தலாம். இத்தகைய கடிதங் கள் மனங்கவர்ந்தவரின் இதயத் தை ஊடுருவும்.

நன்றி :

(சுயவரிகள் .....மற்றும் .......வாசித்ததகவல்கள்...)

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (26-Mar-13, 9:57 am)
பார்வை : 418

சிறந்த கட்டுரைகள்

மேலே