பொது விவிலியம் . 39

பொது விவிலியம்.

முன்னாட்களில் திருச்சபையில்
இலத்தீன் மொழியே ஆதிக்கம்
செலுத்தி வந்தது. விவிலி
யத்தை குருக்கள்மட்டுமே
படிப்பார்கள். அதையும் இலத்தீன்
மொழியிலேயே படிப்பார்கள்.
பின்1962முதல்
1965வரை கூடி விவாதித்த
இரண்டாம் வத்திகான் சங்கம்.
சமதர்ம சமுதாயம் உருவாக செய்வது,
மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது,
பொதுநல சேவை செய்வது,மேலும் வட்
டாரமொழிகளிலேயேவிவிலியம்
உருவாக்கிபயன் படுத்த தீர்மாணித்தது.
விவிலியங்கள் வேகமாக வட்டார
மொழிகளில் மறுஆக்கம் செய்
யப்பட்டது. அன்றைய குருக்கள் விவி
லியத்தை தமிழ்படுத்த முனை
ந்த போது அவர்களுக்கு உதவி
செய்தவர் அணைவரும் வடமொழி
வெறி கொண்டவர்களாக இருந்த
தாலும், இந்துத்துவ உணர்வா
லர்களாக இருந்ததாலும் பெரு
மளவில் தங்கள் ஆதிக்கம் மறைமுக
மாக இருக்கும் படி தமிழ்மொழி
யாக்கம்செய்ய சூழ்ச்சியுடன் செயல்
பட்டனர். இந்தசதி ஆங்கில குருக்களுக்கு
தெரியாததால் ஏராளமான வடமொழி
சொற்கள் தமிழாக மாற்றம்
அடைந்தன. பின்வந்த நாட்களில்
வடமொழி கலப்பின்றி தூயதமிழில்
பொதுமொழிபெயர்ப்பு கொண்டு
வர திருச்சபை மற்ற சபை
யாரையும் அழைத்தது.
தமிழ்நாட்டிலுள்ள அணைத்து
சபைகளின் பிரதிநிதித்துவம் கொண்ட
ஒரு குழுவமைக்கப்பட்டு,
தூயத்தமிழ்ப்படுத்தும்
பணித்துவங்கியது. பழைய மொழி
யாக்கத்தில் மரியாதையற்ற, மனம்
புண்படும்படியான,கொச்சை
யான பகுதிகள் மரியாதையாக
உயர்வாக சரியாக மாற்றப்பட்டு, உதாரணமாக
செவிடன் என்பது காது கேளாதவர்
எனவும், குருடர் என்பது பார்வை
யற்றவர் எனவும்,சப்பாணி
அல்லது நொண்டி என்பது
நடக்கஇயலாதவர் என்றும்,
மலடி என்பது குழந்தை பேறற்றவர்
என்றும், ஜலம், அக்னி, ஸ்தம்பம்,
ஸ்நாணம், ஸ்வாமி, க்ஷணம்
அபிஷேகம்,ஸ்திரி,போண்ற
வடமொழி வார்த்தைகள்
நீக்கவிட்டு ,
தூய தனித்தமிழில் விவிலியம்
உருவாக்கப்பட்டு வெளியிடப்
பட்டது. அதுவரை உடணிருந்த
மற்ற சபையார் பிறகு ஏனோ
இந்த பொதுவிவிலியத்தை ஏற்க
மறுத்து விட்டனர். தமிழ் விவிலியம்
பலகாலக்கட்டங்களில் திருத்தம்
செய்யப்பட்டுள்ளது.
இதைத்தான் இவர்கள் படிப்பது.
தற்போது மொழிப்பெயர்த்தது
தங்களுக்குவசதியாக இல்லை
எனக்கூறி இதைத்தள்ளிவைத்து
விட்டனர்.
மதத்தால் நாம் கிருத்துவர்கள்,
இனத்தால் நாம் திராவிடர்கள்,
பேசும் மொழியால் நாம்தமிழர்கள்.
ஆனால்
நூறுசதம் கிருத்துவர்களாகவும்இல்லாமல்,
நூறுசதம் தமிழனாகவும்இல்லாமல்,
நூறுசதம் திராவிடனாகவும்இல்லாமல்
ஒரு அரைகுறை தனத்தோடும்,
இரண்டும் கெட்டான் தன்மையோடும்,
வாழ்வதில் பொருளென்ன? எதிலும்
உண்மை தனம் இல்லாமல்
இருப்பதிலும்
இந்துமதத்தின் அசிங்கங்களை
விடாமல் பிடித்துக்கொண்டு
இயேசுவின் வார்த்தைகளை மறந்துவிட்டு
போலியான கிருத்தவர்களாக வாழ்வதில்
பொருள்தானென்ன? சிந்திப்போமா?

J G ரூபன்.
23/03/2012.
By cell phone

எழுதியவர் : ரூபன். J G (26-Mar-13, 11:37 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 188

மேலே