ரணம் !...
நீ ...
என் நகம் கடித்து,
துப்பினாய்...
வலிக்கவில்லை எனக்கு!...
சிறு சிறு குறும்புகள்,
செய்வது போல அடித்தாய்...
வலிக்கவில்லை எனக்கு!...
செல்லமாக கிள்ளினாய்,
என் கன்னத்தை...
வலிக்கவில்லை எனக்கு!...
தற்போது,
உன் நினைவுகள்,
என் நெஞ்சில்,
தேனாய் இனிக்க...
உன் மௌனம் ஒன்றே 
என் மனதை,
                "ரணமாக்குதடா"

