கல்லூரி நாட்கள்!!!

கொட்டு வெயிலில்
வெற்று காலில் சூடு
தாழாமல் நான் அலரியபோது
என்னை தூக்கி அரவணைத்து
என் கால் தொட்டு வருடியது!!!!
பள்ளி வேண்டாம், பாடம் வேண்டாம்
என்று நான் அழ
என்னை கண்டிப்புடன் பள்ளியில்
விட்ட உன் கண்டிப்பு!!!!
படிப்பை விளையாட்டாய்
கருதி விளையாடிய என்னை
அது விளையாட்டல்ல வாழ்க்கை
என்று எனக்கு நீ கற்பித்த வாழ்க்கை பாடம்!!!
உன் அன்பு கட்டளைக்கும், கண்டிப்புக்கும்
கட்டுப்பட்டு படித்த காலங்கள் முடிந்தது – பள்ளி வாழ்க்கை!!!
இனி இது உன் வாழ்க்கை என்று என்னையே
என்னிடம் கொடுத்து என் பொறுப்பை உணர்த்தியது!!!
என்று என் தாய் நீ
என் தெய்வமாய்....தோழியாய்....வாழ்க்கையாகி போனாய்!!!!
தெய்வம் வேண்டம், நீ இருக்கும் போது
இன்னும்மொரு கல் எதற்கு
உயிரை நம்பும் நான்
உன்னை நம்புகிறேன்!!!!

கல்லுரி!!! என் முதல் அடி
பயம்,படபடப்பு யாரும் அல்லாத
கட்டில் தனித்து விடப்பட்ட உணர்வு!!!
சென்றது காலங்கள், கற்றேன் கல்லூரியை
கிட்டினர் நண்பர்கள்,ராக்கிங்,செமினார்
என்று என் அகராதியில் புதிய பல
வார்த்தைகள்!!!!!!!!!!!
பட்டாம்பூச்சயாய் திரிந்த காலங்கள்
பட்டென நெஞ்சை தொட்ட அன்பு
வாழ்க்கையில் பல திருப்பங்கள்
என்றும் கிட்டாத சந்தோசம், அன்பு,நட்பு!!!!!!
முட்டி மோதி நாட்கள் செல்ல
என் படிப்பும் தொட்டது மூன்றாம் ஆண்டை....
செய்த குறும்புகள்,சைட் அடிக்க கட் அடித்த
வகுப்புகள்,கல்லூரி மற்றும் கேண்டீன் எனஅனைத்தும் பேசின என் கல்லூரி வாழ்க்கையை!!!!!
ஹாஸ்டல்!! இது இன்னும்மொரு அத்தியாயம்
ராஜா,ராணி ஏன் மகாரானயாய் சுற்றி திரிந்த
காலங்கள்!!
போட்ட சண்டைகள் தொட்ட எல்லைகள்
என எதுக்கும் எல்லை இல்லை!!!!
நான்கு ஆண்டுகள் சென்றது நான்கு நிமிடங்ளாகய்
முடிந்தது என் கல்லூரி வாழ்க்கை சேர்ந்து
எனது ஹாஸ்டல் வாழ்க்கையும்!!!!
என் முதுநிலை படிப்பு
மீண்டும் ஒரு அத்தியாயம்,மீண்டும்
ஒரு வாழ்க்கை!!!
வாழ்க்கையில் அத்தியாயங்களுக்கும்,பக்கங்களுக்கும்
குறைவேன்பதே கிடையாது!!!!!!!!!

எழுதியவர் : (27-Mar-13, 11:13 am)
சேர்த்தது : செல்வி இலா
பார்வை : 129

மேலே