காதல் பிடிவாதம்

என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் கண்கள்
பிடிவாதமாய் பார்க்கிறது உன்னை !
என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் காதுகள்
பிடிவாதமாய் கேட்கிறது உன் குரலை !
என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் உதடுகள்
பிடிவாதமாய் பேசுகிறது உன்னை பற்றி !
என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் கால்கள்
பிடிவாதமாய் நடக்கிறது உன்னை நோக்கி !
என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் நாசி
பிடிவாதமாய் நுகர்கிறது உன் மணத்தை !
என்ன சொல்லியும் கேட்க மறுக்கிறது என் இதயம்
பிடிவாதமாய் நினைக்கிறது உன் நினைவுகளை
எப்படி கேட்கும் இவை அனைத்தும் ?
பிடிவாதமாய் இருப்பது அவைமட்டும்தானா
நானும்தான் !

எழுதியவர் : அமிர்த பிரதீப் (24-Nov-10, 1:46 pm)
சேர்த்தது : AMIRTHAPRADEEP
பார்வை : 571

மேலே