என்ன தான் தேடுகிறாய்?

அலைந்து திரிந்து அமைதியில் நானும்
அலைவாய் கரையில்
அமர்ந்திருந்தேனே
ஆளுக்கொரு ஜோடிஎன
கொத்து கொத்தாய் கூட்டம்
குவிந்திருந்ததே
உற்று நோக்குகிறேன்
உன் உயிரோட்டம் தனை
எட்டி எட்டி வந்து எதையோ தேடுகிறாய்
எதுவும் மசியவில்லை என
இளகி மனம் திரும்புகிறாய்
அன்பாய் அழகாய் ஆர்பரிக்கின்றாய்
இரைச்சலாய் இன்னிசையாய்
நித்தமும் தொடர்கின்றாய்
எதையோ தேடி அதையே நாடி
இன்னமும் உருள்கின்றாய்
எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் ஏக்கத்தோடு திரும்புகின்றாய்
ஏமாற்றம் மிஞ்சினாலும்
ஏற்றத்தோடு நடை போடுகிறாய்
எனக்கே பாவமாய் இருக்கிறது
என்ன தான் தேடுகிறாய்?
என் போல் உனக்கும்
காதலியின் தேடுதலோ?
நல்ல காதலி கிட்டும் வரை
நாளும் தொடர்வோம்
நானும் வருவேன்
நட்பாய் வளர்வோம்

பசுமை நிலவன்

எழுதியவர் : பசுமை நிலவன்.. சென்னை (27-Mar-13, 7:08 pm)
சேர்த்தது : pasumainilavan
பார்வை : 79

மேலே