சாபமான வரம்

அம்மா !!!
கருவிலேயே எனை நீ கரைத்திருந்தால்
உன் மனதின் கனம் கண்டு
கரைந்து பேயிருப்பேன்.

விரும்பாத கருவாய் நான்
ஜனனம் கொண்டதாலா
சபிக்கப்பட்டு
ஜடமாய் தினம் வாழ்கிறேன்

பெண்ணாய் பிறந்திட்டதால்
பொன் சேர்க்க வருமென்று
பொருட்படுத்தாமல் -நீ
போனாயோ ?

அன்னையர் தினத்துக்கு
அன்னை பற்றி
ஆக்கம் எழுதணுமாம்
அன்னையைக் காணாத
அபலை நான்
கணக்கின்ற நெஞ்சோடு
கவிழ்கிறது
கண்நீர்த்துளிக்களுமே..

தாய் ....
உன் முகம் பார்த்ததில்லை
தாய்ப்பாலும் குடித்ததில்லை
உன் மாரோடு ...
தலைசாய்த்து தூங்கவில்லை
தாலாட்டும் கேட்டதில்லை .

அகலாய்கிறேன்......
அன்புக்கு அம்மாவாம்
ஆனால் எனக்கு
ஆறுதல் தரக்கூட
அந்த அன்னைக்கே
எண்ணமில்லாமல் பேயிற்றே??

பசிக்காய் கையேந்தி
பாசத்துக்காய் உளம் நொந்து
அழுகிறேன் ...
என்னைப் பெற்றவளை
சபித்தபடி ...
தினம் தெரு ஓரத்தில்..

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (28-Mar-13, 2:45 pm)
சேர்த்தது : hafeela
பார்வை : 84

மேலே