கரியவாசம் சொன்னது சரிதானே...?!

கரியவாசம் சொன்னது சரிதானே...?!

இந்தியாவிற்கான இலங்கைத் தூதர் கரியவாசம் தமிழர்கள் குறித்தும் சிங்களவர்கள் குறித்தும் சமீபத்தில் கூறியவை சொன்னவை சரிதானே..! 75 சதவீத சிங்களவர்கள் ஒரிஸ்ஸா மாநிலத்தை சார்ந்தவர்கள்...வங்களாத்தைச் சேர்ந்தவர்கள்...
சுருக்கமாக கூறினால் வட இந்தியர்கள் என்று...இங்கே தமிழ் ஆர்வலர்கள்..அமைப்புகள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள் ஈழத் தமிழர்களைப் பார்த்து.

சிங்களவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் வட இந்தியர்களின் உறவுகள்..சொந்தங்கள் என்று. வெறும் 14 சதவீதம் உள்ள தமிழர்களுக்கு நீங்கள் போராடுவது சரியா என்று கேட்டுள்ளார். போராடுவது தமிழர்கள் மட்டும் தான்...எவ்வாறு இந்தியர்கள் அனைவரும் தமிழர்கள் மீது தீரா கோபத்தில் இருக்கிறார்களோ..அதுபோல நாங்களும் இருக்கிறோம் அது தவறா..? திருந்த வேண்டாமா நீங்கள் என்று கேட்பது சரிதானே...!

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வைக்கோ மற்றும் ராமதாஸ் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் பா.ஜ.க வின் தலைவர் அத்வானியை கண்டிக்காதது ஏன்..?

ராமர் வழி வந்தவர்கள் சிங்களவர்கள்...இராவணன் வழி வந்தவர்கள் தமிழர்கள்..சமஸ்கிருதம் வழியே தான் சிங்களம் தோன்றியது, தமிழ் தோன்றியது என்று கூறியதை ஏன் கண்டிக்கவில்லை..!

அத்வானி கூறியது சங் பரிவார் தொனி...காரியவாசம் கூறியது புத்த பிக்குகள் தொனி...இரண்டின் பொருளும் ஒன்றுதானே...!

அதற்குத் தான் பல பதிவர்கள் இவ்வாறு கூறினார்கள். நீங்கள் எல்லாம் வெறும் 75 வருடங்கள் தான் இந்தியர்கள்...நாங்கள் பத்தாயிரம் வருசத்திற்கு மேலாக தமிழர்கள் என்று.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Mar-13, 4:25 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 81

சிறந்த கட்டுரைகள்

மேலே