டெசோவின் தாக்கம் தானாம் ஜெ - யின் சட்டசபை தீர்மானம்... சொல்கிறார் வீரமணி...! அப்படியென்றால் மாணவர்கள் போராட்டம்....?!

டெசோவின் தாக்கம் தானாம் ஜெ - யின் சட்டசபை தீர்மானம்... சொல்கிறார் வீரமணி...! அப்படியென்றால் மாணவர்கள் போராட்டம்....?!

டேசொவின் தாக்கம் தான் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் என்று கூறியுள்ளார் திராவிட கழக பொதுச் செயலார் கீ.வீரமணி அவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குப்பையில் வீசப்பட்ட டெசோ என்ற அமைப்பை தூசி தட்டி புதுப்பித்தார் திமுக வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அப்பொழுதே தமிழ் ஆர்வலர்களும் இயக்கங்களும் கடுமையாக விமர்சித்தன. டெசோ என்பது இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்வதற்குத் தான் என்று சொன்னார்கள்...இதை நிரூபிப்பதைப் போல டேசொவில் தனி நாடு என்றெல்லாம் தீர்மானம் போடக்கூடாது என்று சொன்னார்கள் அந்தோனியும் ப.சிதம்பரமும்....இதற்கு படு கோபமாக சொன்னார் மு.க., அவர்கள் இவ்வாறு.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்...தமிழ் நாட்டில் நாங்கள் அரசியல் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்களா...? என்றவுடன் அமைதியானார்கள் காங்கிரஸ்காரர்கள். பிறகு தான் அனைவரும் அறிவோமே....ஐ.நா.வி. கொண்டு போய் புகைப்படங்களை காண்பித்தார்கள்..டேசொவின் தீர்மானங்களை காட்டினார்கள்..பல பத்து நாடுகளிடம் பேசினோம் அறிக்கை கொடுத்தோம் என்றார்கள். ஸ்டாலினும் தி.ஆர்.பாலுவும் சுத்தி சுழல்கிறார்கள் என்று மு.க.அறிக்கை மேல் அறிக்கை விட...இறுதியில் ஐ.நா.வும் அமெரிக்காவும் இந்தியாவும் கூடி ஒன்று சேர்ந்து பெரிய அண்டாவில் உள்ள அல்வாவை கொட்டினார்கள் தமிழர்களின் வாய்களில் என்று.

பொது எதிரியான ராஜபக்சேவை முன்னிறுத்தாமல் கலைஞர் கருணாநிதியை குறை சொல்வது விவேகம் ஆகாது, பிரச்சனையை திசை திருப்புவதாகும் என்கிறார் கீ.வீ. அவர்கள். லாவணி பாடினால் ஜெ., அவர்கள் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கூறியவைகள் செயல்கள் வண்டி வண்டியாக அணிவகுத்து நிற்கும், எனவே தயை கூர்ந்து குறை சொல்லாதீர்கள் மு.க.வை என்று கெஞ்சுகிறார்.

இருபத்தைந்து ஆண்டு காலம் தொடர்ச்சியாக மத்திய அரசில் இருந்து கொண்டும்...மாநிலத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியில் இருந்து கொண்ட திமுக என்ற தமிழக மக்கள் விரோத கட்சியைப் பற்றி பேசக்கூடாது என்கிறார். இவர்களை விட சற்று அல்ல மிக மிக கீழே உள்ள கட்சி தான் அதிமுக.

ஆற்றையும் ஆற்று மணலையும் மலைகளையும் கல்வியையும் அலைக்கற்றையும் பெரும் பெரும் வியாபார நிறுவனங்களாக பணம் குவியும் தொழில்களாக மாற்றியதே திமுக கும்பல்தான். ஊழல் என்றாலே அது காங்கிரஸ் தான் என்ற கூற்றை அடித்து நொறுக்கியவர்கள்...காங்கிரஸ்காரனே வாய் பிளந்து நின்றான் இவர்களின் கொள்ளைகளை சுருட்டல்களை பார்த்து. இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவர்கள்..இருக்கட்டும் இவைகள் எல்லாம்.

மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்ததால் தான் இந்த தீர்மானங்களும்...திமுக வின் பதவி விலகல் நாடகமும் என்று யாருக்குமே தெரியாது என்று கருதுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் இத்துடன் முடிந்து விட்டது என்றும் கூற வருகிறார்
கி .வீ.....தங்களது ஊதுகுழல்களை வைத்து கெஞ்ச வைத்துள்ளார்கள்..புலம்ப வைத்துள்ளார்கள் என்று கருதலாமா...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Mar-13, 3:20 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே