சி.ஐ.ஏ வின் புதிய இயக்குனர் ஒரு பெண்...? யாராக இருந்தாலும் மனித குல விரோத செயல்கள் நின்று விடுமா என்ன...?

ஆணோ பெண்ணோ அல்லது திரு நங்கையோ யாராக இருந்தால் என்ன..? அந்த அமைப்பு மனித கொலை வெறி கொண்ட அமைப்பு தானே தவிர வேறில்லை, சமீபத்தில் கூட வெனிசுலா அதிபருக்கு புற்று நோய் கிருமியை ஏற்றி கொலை செய்த அமைப்பு தான் இந்த சி.ஐ.ஏ.
அமெரிக்க ரகசிய சேவைத்துறை அதாவது சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ. மற்றும் தற்போதுள்ள தேசிய தீவிரவாத தடுப்பு துறை...தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு என்று எந்த கருமாந்திரத்தை எடுத்தாலும் பார்த்தாலும் ஒரே ஆணதிக்க கூட்டம் தான் இருக்கும் இவற்றையெல்லாம் மாற்ற முடியாது தற்போதைய அரசுகளினால்.
இந்த ஆணாதிக்க துறையில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க செயல் என்று ஒபாமா அவர்களை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன அங்கிருக்கும் ஊடகங்கள். இந்தப் பெண்மணியின் பெயர் ஜூலியா பியர்சன். நாடுகளுக்கு இடையே சண்டை மூட்டுவதில் தொடங்கி, புதிய புதிய விசக் கிருமிகளை பரப்புவது என்று முடிவற்று இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு தான் இந்த உளவு த்துறைகள்.
தற்போதைய உலகமயத்தில் இவைபோன்ற உளவு அமைப்புகள் தான் அந்தெந்த நாட்டின் அரசுகளை காப்பாற்றி வருகின்றன.
இந்த அரசுகளும் மக்களுக்கு எதிரானவை...இவர்களின் உளவு அமைப்பும் மக்களுக்கு எதிரானவை. இந்த அமைப்புக்கு எவர் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.
சங்கிலிக்கருப்பு