ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...
![](https://eluthu.com/images/loading.gif)
இது வானம் சிவக்கின்ற நேரம்
தமிழீழம் மலர்வுக்கான பொழுது இது
தமிழகத்து குரலில் தமிழ் ஈழம் தெரிகின்றது.
காட்டாற்று வெள்ளம் போல்
கல்லூரி மாணவர்களின் இணைவு
உலக வரைபடத்தில் தமிழீழத்தை
தொட்டு காட்டுகின்றது...
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புலத்து தமிழன்
வெறும் அரசியல் என்ற நம்பிக்கையில் தாயகத்து தமிழன்...
பொன் சிவகுமார் தொடக்கிய வேள்வி
தமிழகத்தில் ஆயிரம் சிவகுமார்களை உருவாக்கி விட்டது...
உறுதிபடைத்த வேங்கைகள் இறுதி வரை போரிட்டார்கள்
மனவலிமை கொண்ட மாணவசமூகம் இறுதிவரை போராடுகின்றது-ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..