முழுவுலக முற்றுகை- கே.எஸ்.கலை

எளிதாக
அழகாக, மலிவாக
உடன் வாழும்
விடம் !

சூட்டில் இளகி,
குளிரில் இறுகி-
அமைதியாய் அழிக்கும்
பிறவி !

சாகாத
வரம்வாங்கி,
சாகடிக்க தவமிருக்கும்
துறவி !

மண்வாழ்,
கடல்வாழ், வனவாழ்
அவதியுறும் நிலை-
வரவால் !

மா, வாழை
பனை, கமுகாய்-
அரங்குகளில், மேடைகளில்
இடம் !

விண்ணில்,
விளையாட்டில்,
விவசாயத்தில்-
எங்கேயும் எப்போதும் !

மட்காத புரட்சி !
முடியாத மீள் சுழற்சி !
ஊமைத் தாக்குதலாய்
நோயுடன் அழற்சி !

பழகிப் போனதால்
பாழாய்ப் போகும் வரை
தொடரும் முடிவிலி
பந்தம் !

----------இது

வேதியல்
விஷங்களை வெளித் தள்ளி-
வெகுளியாய் வாழும்
நெகிழி !
----------
(நெகிழி – பிளாஸ்டிக்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Mar-13, 7:11 pm)
பார்வை : 175

மேலே