கந்தர்வ காதலி,,,,

கந்தர்வ காதலி,,,,

மாறுப்பட்ட காதல்
கதாபாத்திரங்களாய்
என் தனிமையும்
அந்த பௌர்ணமியும்,

திறந்து கிடக்கும்
ஜன்னல் வழியே ஊடுருவி
புத்தக அறை நாற்காலியில்
நான் இருக்கிறேனா??
என்பதை போல் ஒரு
வெளிச்சத்தோரணை வீசுகிறாள்,,,

நான் வந்துவிட்டேன்
என்னவனே,,,நீ இருக்கிறாயா??

உன்னோடின்றொரு முழு நேர
"ஸ்பரிச உரசல் இராத்திரி"
யுத்தம் நடத்திவிட்டு போய்விடுகிறேன்,,,

என்னை வா என்றழைக்கும்
அவளின் வெளிச்சம் கண்டு
எட்டிப்பார்க்க துள்ளித்தாவும்
என் அகலத்திறந்த கருவிழிகளது

அழகாய் வடிக்க தூண்டுகிறது
அவளையே ஒரு கவிதையாய்,,,

காத்திருக்கிறேன்
அவளின் முழுநீள
பிறவி நாளுக்காய்,,,

இறந்து இறந்து
பிறவி எடுக்கும் இவளென்
அதரத்துயர் தீர்க்கும்
முப்பதுநாள் இடைவெளிக்காதலி,,,

சிலந்தி வலையில்
சிக்கிய ஒரு ஈசலாய்,,
என் மனது ஏனோ கிடந்தது
பறிதவிக்கிறது தனிமை சிறையில்,,,

ஓரிரு நாழிகையில்
ஏதோ தீபாவளி வரபோகிறதாம்

அன்றோ அவளின் முழு
அஸ்தமன நாள் என்று
எண்ணுகையிலேனோ
விழிநீர் கடலாய் சுரக்கிறது

உன் வருகையில்
மட்டும்தான் குளிர் தென்றலே
மையல்கொண்டு அல்லிக்கொடியில்
ஆசைத்தழுவல் நடத்துகிறது

கந்தர்வ மகளே,,,

உன்னை கூவித்தோற்கும்
எல்லையில்லா என் ஆசைகள்
இங்கொரு பக்கம் கேவித்தேய,,,

நீயோ அங்கொரு
பக்கமாய் தேய்ந்து
கொண்டிருக்கிறாய்,,

நீலவான புடவை விரிப்பில்
கதகதக்கும் நீ ஒரு
ஜரிகைத்தைக்காத வெள்ளித் தாரகை,,

இரவின் ஒளியில்
ஒரு இரவல் விதைச்சல்,,

என் விரகம் கொள்ளும்
இது ஒரு இளமை காய்ச்சல்

மீண்டும் பார்க்கக் கூடுமோ
இதுபோலொரு இன்ப விளைச்சல்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (1-Apr-13, 12:18 am)
பார்வை : 131

மேலே