கனிந்த காதல்

மாலை நேர மயக்கம்
காதல் மனதில் துடிக்கும்
கால்கள் கடல்
நோக்கி நடக்கும்
கைகள் முத்தமிடும்

நாம் நடந்து வந்த
பாத மணல்
வீடுகளில்
நண்டுகள் குடியேறும்

நிலவே நம் காதல்
பார்த்து வியக்கும்
வீண் மீன்கள் சிரிக்கும்
கரை துரத்தும் அலைகள்
உன் விழி பார்த்து ஓடும்

வாடை காற்று
சேலை தீண்டும்
மூச்சு காற்று
தேகம் தீண்டும்

துள்ளி குதிக்கும்
சுறாக்கள் உன்
சிரிப்புக்கே
நடனங்கள் ஆடும்

உப்புக்காற்றில்
வறண்ட தொண்டையின்
தாகம் தீர்க்க
எச்சில் முத்தம்
தேன் பாயும்

வாடைக்கு வேலிபோட்டு
வாரி நீ அணைக்கையிலே
நம் தேகம் நடுவே
சிக்கிய தென்றல்
மூச்சு திணறும்

நண்டு ஓடும் விரலால்
உயிர் மேய்ந்து
என் தலைவாரி
தாலாட்டி
நிலா சோறூட்டி
நானும் நீயும்
மணல் வீடு
நுழைகையில்
நிலவே வெக்கப்படும்

மௌன இருட்டில்
மலரும்
நம் இன்பம்
ஓர் உயிருக்கான
உழைப்பு

எழுதியவர் : புங்கையூர் பூவதி (1-Apr-13, 4:02 am)
சேர்த்தது : பூவதி
பார்வை : 146

மேலே