இணைந்திடுவோம் புதியநட்பில்..!

என் வெற்றியை
தன் வெற்றியாய்
கொண்டாடும் உன்-இனிய
நட்பினை தொலைத்துவிட்டேன்..!

என் துயில்வரை
உன் துயில்தொலைத்து
நீ அனுப்பும்-குறுஞ்
செய்திகளை இழந்துவிட்டேன்..!

என் சோகங்களை
தூர அனுப்பும்
உன்னழகு முகச்சிரிப்பின்
முகவரியை கிழித்துவிட்டேன்..!

நாம் என்று
இருந்த நட்பை
ஏதேதோ காரணத்தினால்
நான்-நீ'யென்று மாற்றிவிட்டேன்..!

இவ்வளவு வலிக்குமென்று
சண்டையின் முடிவினிலே-தெரிந்திருந்தால்
மறுகணமே சொல்லியிருப்பேன்
மன்னித்துவிடுயென்று நானாக-முன்வந்து..!

இனிவேண்டாம் நம்வாழ்வில்
இதுபோல ஒருபிரிவு
இணைந்திடுவோம் புதியநட்பில்
இலக்கணமாய் அனைவருக்கும்..!!

எழுதியவர் : அன்புச்செல்வம் (1-Apr-13, 10:34 pm)
பார்வை : 263

மேலே