அவமானம் உரமாகும்

கருவேப்பிலை
விலை கூட
ஒரு நாளைக்கு
இரண்டு முறை
ஏற்ற இறக்கம்
காண்கிறது
மனிதர் நாம்
ஏற்ற இறக்கம்
கண்டால் என்ன ?
---------------------------------
---------------------------------
பாறை
மண்ணாவதற்கே
பலநூறு ஆண்டுகள்
காத்திருக்கிறது . . .
நாம் மனிதனாவதற்கு
சில நூறு
அவமானங்கள்
பட்டால் என்ன ?

அவமானங்கள்
உரங்களாகும் . . .

ஒரு இடத்தில் நின்றே
வாழ்ந்து முடிக்கும்
மரங்களுக்கே
உரங்கள்
தேவைப்படுவதுண்டு
உலகே சுற்றும்
நமக்கு?
-----------------------------------
-----------------------------------
அங்கும் இங்கும்
அடித்துத் திரியும்
காற்றுக்கே
அவ்வளவு
அதுப்பென்றால்
அதைக்
குடித்து வாழும்
நமக்கு . . .
--------------------------------------
-------------------------------------
நீ எறும்பா ?

இரும்பைத்
துளைக்கும்
எறும்பாய் இரு

இதுவரை
எறும்பிற்கிருந்த
வரையறை அறு


உன் கொடுக்கின்
பார்மிக் அமிலம்
உன்னைப்
படையெடுக்க
நினைப்பவர்களுக்கு
பாடம் செய்யட்டும்




உன் தோல் கொண்டு
உலகம் இனி
ஓசோன்
நெய்யட்டும்
---------------------------------------------
----------------------------------------------
நீ சூரியனா ?

அது என்ன
கிழக்கில்
மட்டும் உதயம் ?
மேற்கிலும்
உதயம் கொள்
மேற்கில் உதிப்பது
தோல்வியில்லை

தோல்வி ஒன்றும்
சிறிதுமில்லை

தோல்விக்கு மட்டுமே
துணைக்கால் உண்டு
வெற்றிக்கில்லை. .

எழுதியவர் : kumar (1-Apr-13, 11:08 pm)
பார்வை : 102

மேலே