சரித்திரத்தின் புதிய அத்தியாயம்

புறாக்கள் சிறகு
விரிக்கும் வானில்
போர் மேகங்கள்
சூழ்ந்தன.
அமைதிப் பறவைகள்
கூடுகளை நோக்கிப்
பறந்தன
குண்டுகளின் பொழிவில்
வீடுகளும் கூடுகளும்
சிதறின
வானத்தையும் பூமியையும்
இழந்த
மனிதர்களும் பறவைகளும்
ரதத்தில் புரண்டனர்
சரித்திரம் குருதிக் கரங்களால்
ஒரு புதிய அத்தியாயத்தை
எழுதத் துவங்கியது.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-13, 11:00 pm)
பார்வை : 61

மேலே