வான் நிலவில் வாழக் கண்டேன்
காலையில் மலரும் மலர்களில்
உன் முகமதனைக் கண்டேன்
உறக்கத்திலும் உற்சாகத்திலும்
உன் உதட்டின் மின்னல் ஒளிரக் கண்டேன்
என் அருமை தோழி ..!
ஆலமர ஊஞ்சலில் அமைதியாய்
ஆனந்தமாய் ஆடிடக் கண்டேன்
இன்றுபோல் என்றுமே நீ
நீடூழி வாழக் கண்டேன்
என் அருமை தோழி ...!
ஊதிவிட்ட பலூனில்
ஊரறிய காணாத உன் உயிர் மூச்சில்
ஊதியக் கன்னம் கண்டேன்
என் சகியே நீ ...!
மின்னிடும் புன்னகையில்
நீ எனக்களித்த அன்பினை
நிலையில்லாத ஆனந்தம் என
உன்னிடம் கண்டேன்
என் அருமை தோழி ...!
ஏகாந்தமாய் நான் ஏங்கிட
நீ தாமதமாய் என்னையே நோக்கி
அழைக்கும் உன் இசையொழிய
இனிய குரலொலியைக் கண்டேன்
என் அருமை தோழி ...!
உச்சி முகர்ந்து நீ பாடும்
உச்சி குளிர என் மனதினில்
ரீங்காரமாய் ஒலிக்கிறது
உன் குயிலிசைப் பாடல் தேனாக
என் அருமை தோழி ....!
என் கண்களும் காதுகளும் தானாக
அசைந்து கண்மலர்களோடு
இனிமை சேர்க்கின்றது அனைத்தும்
அமுத கீதமாக உன் இதழில் கண்டேன்
என் அருமை தோழியே ..!
உன் ஞாபகங்களில் மெய்மறந்தேன்
வான் நிலவில் இன்றும் நீங்காமல் அருகினில் வாழ்ந்திடக் கேட்டேன் கண்டேன்
என் அருமை தோழியே ...