புதுசா ஒரு க(வி)த சொல்லட்டுமா ?
முள்ளு தச்சா
முனங்கிறோம்!
கல்லு தட்டினா
கலங்கிறோம்!
ஒரு வேளை பட்டிணினா
வயித்த பிசயிறோம் !
சட்ட கிழிஞ்சா
சண்டைக்கு போறோம் !
தெரியாம ஒருவன்
கால மிதிச்சிட்டா
பறக்கிறோம் சண்டைக்கு சிட்டா !
அண்ணன் தம்பிக்குள்ள
ஆயிரம் சண்டை !
தான் வீட்ட பாக்காம
அடுத்தவன் வீட்ட பாத்து
அலையிறான்
இது பெரிய கூத்து !
மாசத்துக்கு ஒரு நாள்
குளிக்கிறவன் மத்தவன பாத்து
சொன்னானாம்
என்னையா இந்த நாத்தம்!
ஒரு ஈ எறும்ப கூட
கொல்ல மாட்டேன்
என்று சொன்னானாம்
இறச்சிகடகாரன்!
சாமி கும்பிட வந்த
பக்தன பதம் பார்த்தானாம்
கோவில் பூசாரி .
என்னையா உலகம் இதுன்னு
சலிச்சுகிட்டானாம்
உலக சுத்தி பாக்க ஆசைப்பட்டவன்!
உங்களுக்கு கதை புரிஞ்சதா
இதுதான் உலகம் புரிஞ்சிகொங்கோ !
*****************************************