குடி குடியை கெடுக்கும்

குடி குடியை கெடுக்கும் ,
குடி பழக்கம் மனிதனை அழிக்கும் ,
அரசை பொறுத்தவரையில் அது ஒரு வருமானம்
சமூகத்தை பொறுத்தவரையில் அது அவமானம்!

விளம்பரமில்லா வியாபாரமாச்சு
பொழுது போனா போர்கலமாச்சு
பொண்டாட்டி தாலி அடகுக்கு போச்சு
குடும்ப வாழக்கை நரகமாச்சு !

பாட்டில் எடுத்தவன் பாடாய் படுத்தறான்
குடும்பத்தை வெறுக்கிறான் பயித்தியம் ஆகிறான்
வீதியில் புரளுறான் சாக்கடையில் குளிக்கிறான்
வீணாய் போகிறான் , வீட்டை பாழாய் ஆக்குறான்!

கோபத்தில் குதிக்கிறான் கொதித்து போகிறான்
நரம்பு தளர்ச்சியால் தளர்ந்து போகிறான்
பயித்தியம் பிடித்ததால் வயித்தியம் தேடுறான்
வாழ்க்கையை முடிக்கிறான் இளைய வயசிலே சாகுறான் !

காசாய் கேட்கிறான் கடன் பல வாங்குறான்
வீதி சண்டையில் மண்டையை உடைக்கிறான்
கொலையும் செய்ய துணிந்து போகுறான்
மனிதன் என்பதை மறந்து வாழ்கிறான் !

அப்பன் குடிக்க மகன் பாக்குறான்
மகன் குடிக்க பேரன் பாக்குறான்
பேரன் குடிக்கையில் ஊரே குடிக்குது,
ஐயோ உலகம் எங்கே போகுது !

வருமானம் பார்த்து அரசே கவிழ்ந்தது
தனி மனித வாழ்க்கை மதுவிலே கரைந்தது
வெந்த வயிற்றுக்கு மறுந்து போட
அரசு செய்யுது நல்வழி மருத்துவம் !

பாட்டிலும் காலி , வீட்டிலும் காலி
உடம்பும் காலி , உயிரும் காலி
குடித்த கணக்கை எடுத்து பார்த்தல்
போனது மட்டுமே நிச்சயம் தம்பி !

திருந்தி பார் , இனி திருத்தி பார்
இருப்பவரையாவது இனி வாழ விடுவோம்
மதுவை மறப்போம்
இனியாவது மனிதனாக வாழ்வோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Apr-13, 11:45 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 3978

மேலே