சிறந்த நட்பு

கூடா நட்பு கேடு செய்யும்
உண்மையான நட்பு உலகம் வெல்லும்
தாயின் அன்பும் தந்தையின் பரிவும்
இதிலே உண்டு இன்னும் கேள் !

சாதிக்க செய்யும் சங்கடம் வெல்லும்
ஒற்றுமை உணர்வால் உலகமும் வெல்லும்
கூடி சேர்ந்து ஒன்றாய் பகிர்கயிலேயே
உலக துன்பம் ஓடி மறையும் !

உறவு தோற்கும் பகைமை காட்டும்
நட்பு மட்டுமே பசுமை காட்டும்
ஏணி படியாய் என்றும் இருக்கும்
ஏறி வந்தவரை எதற்கும் கேள் !

வாழ்க்கையில் துன்பம் வதைத்து எடுக்கையிலே
துவண்டு போகும் உடலும் மனமும்
நண்பன் தோள்கள் நாடி போகையிலே
தூணாய் இருக்கும் நல்ல துணையாய் இருப்பான் !

நண்பன் திருமணம் நாளுக்கும் இனிக்கும்
நண்பன் மரணம் வாழ்க்கையே வெறுக்கும்
நட்பு கிடைக்கும் நாளே உலகில் இனிது
நண்பன் பிரியும் நாளே உலகில் கொடிது !

காசு பணமும் அள்ளி கொடுப்பான்
கஷ்ட நேரத்தில் உயிரையும் கொடுப்பன்
உலகில் சிறந்த உறவுகளிலே
நட்புக்கு மட்டும் முதல் இடம் !

மறைத்தே வாழும் பொய்யான உலகம்
மறைப்பது என்பது நட்பில் இல்லை
பறந்து விரிந்த உலகம் போல
வெளிப்படை உலகம் நட்பு உலகம் !

பணமும் படிப்பும் பதவியும்
எதுவும் இல்லை இங்கே தகுதி
அன்பு மட்டும் இலக்கணம் ஆகும்
அதுவே சிறந்த நட்பாய் மாறும்!

காலம் மாறும் உறவுகள் ஓடும்
தேடும் சொந்தம் நட்பு மட்டும்
உலகம் அழியும் நாளிலும் கூட
எங்கள் நட்பு மாறாது !

நட்பை போற்றுவோம் நண்பர்களே வாருங்கள் !

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Apr-13, 7:34 am)
Tanglish : sirantha natpu
பார்வை : 2201

மேலே