துளிப்பாக்கள்-V-கே.எஸ்.கலை

விம்முகிறாள்,
தாலி மீட்பு பத்திரத்தோடு
கைம்பெண் !

வெற்று மார்பில்
காற்று வாங்கி வளிக்கூண்டானது
ஏழையின் வயிறு!

தெரு நாய்களுக்கும்
தெருக் குழந்தைகளுக்கும் போட்டி
விடுதியோர குப்பைத் தொட்டி !

சினிமாவில் வாழவும்,
வாழ்கையில் நடிக்கவும் தெரிந்தால்
நடிகன் !

அர்ச்சனை-
விலைப் பேசப் படுகிறார்
கடவுள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (5-Apr-13, 9:35 am)
பார்வை : 459

மேலே