விடியல் .....!
நண்பா ....!
நீ
கனவுகள் மட்டும் காணும்
காகித பூவாய்
வாழ்கிறாய் ......!
இப்படி - சரிந்து கிடக்கும்
உனது சரித்திரத்தை
சற்று புரட்டிப் பார் ....!
அதில்
சிந்தனைத் துளிகளால்
புத்துயிர் பெற்ற
உனது அறிவுச்சிற்பங்கள்
ஆழ்ந்து உறங்குகிறது ....!
அவற்றை
உறங்கச் செய்யாதே
உலகறியச் செய் ......!
உன்
பாதையில்
முட்கள் முரண்பாடு
செய்தாலும் ...,
"நம்பிக்கை" என்னும்
நல்அரண்
விடி வெள்ளியாய்
விழித்துக் கொண்டிருக்கும்
நல் விடியலைக் காண .....!