பயணம்
மழை நாளில்
உன் பேச்சு
இளஞ்சூடு .....
வெயில் நாளில்
உன் பார்வைகள்
இளநீர் காடு .....
இலையுதிர் காலத்தில்
இன்முகம் உனது
திறக்காத கவிதை புத்தகம்......
குளிர் காலத்தில்
உள்ளங்கையில்
கொண்டிருப்பாய்
எனக்கான வெது வெதுப்பை .....
காலமும் நீயும்
நதியில்
வளைந்தோடும்
ஒரு பயணம்....