அழுக்குத் துளிகள்-III-கே.எஸ்.கலை
![](https://eluthu.com/images/loading.gif)
பாலைவனம் பார்க்க
மந்திரி குடும்பம் சுற்றுலா
நேற்றைய வயல் !
•
மூன்று வயது
சிசுவிற்கும் சிறைச்சாலை
முன்பள்ளி !
•
ஒழுக்கச் சீர்கேடு
பிள்ளையார்சுழி போடுகிறது
பாடசாலைகள் !
•
சிசுக்கொலை தப்பானது
மாத்திரைகளும் உறைகளும்
சட்டப்படி விற்பனை !
•
போராட்டங்கள் சூடானது
வியர்வையோடு குளிர்காய்கிறார்கள்
அரசியல்வாதிகள் !